நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ; எப்போது தெரியுமா?
ஜான்சி ராணி October 30, 2024 03:14 PM

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு ‘Nayanthara: Beyond The Fairy Tale’ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நவம்பர் 18-ம் வெளியாகிறது. 

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லி, என இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். திருமண புகைப்படங்களில் சிலவற்றை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.  

இவர்களின் திருமண நிகழ்வு ஒளிப்பரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது.நயன்தாரா திருமண நிகழ்வுகளை ஆவணப்படமாக, நிகழ்வு வீடியோவை, ”பியாண்ட் தி ஃபேரி டேல்” (beyond the fairy tale) என்ற பெயரில் உருவானது. அதன் டீசர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், 1 மணிநேரம் 21 நிமிடங்கள் கொண்ட விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண ஆவணப்படம் வரும் நவம்பர்,18 ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நயன்தாரா பிறந்தநாள் அன்று வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


© Copyright @2024 LIDEA. All Rights Reserved.