இயக்குநர் செல்அம் இயக்கத்தில் யூடியூபர் TTF வாசன் நடிப்பில் உருவாகி வந்த மஞ்சள் வீரன் திரைப்படம் திடீரென கைவிடப்பட்டு தற்போது அதில் ஹீரோவாக கூல் சுரேஷ் நடித்து வருகிறார். Bike Vlog மூலம் யூடியூப்பில் பிரபலமான TTF வாசனுக்கு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இயக்குநர் செல் அம் இவரை வைத்து மஞ்சள் வீரன் என்ற படத்தினைத் தொடங்கினார். இதற்காக பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் TTF வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி கை முறிந்தது. மேலும் காவல் நிலையத்தில் இவர் மேல் வழக்குப் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார் வாசன். அவரை வரவேற்க இயக்குநர் செல்அம் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். செல்அம் TTF வாசன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். சில நாட்கள் சென்ற நிலையில் TTF வாசன் மீண்டும் திருப்பதி பகுதியில் அதிகவேகமாக பைக் ஓட்டியும் சில விரும்பத்தகாத கருத்துக்களையும் தெரிவித்ததால் திருப்பதி போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் இயக்குநர் செல் அம் வாசன் மேல் கோபமடைந்தார்.
படத்தின் பணிகள் பாதிக்கப்படுவதால் இனி TTF வாசனை வைத்து படம் இயக்குவது சிரமமான காரியமாக இருந்ததால் படத்திலிருந்து அவரை நீக்கினார் செல் அம். இருப்பினும் இவர்கள் இருவரும் பரஸ்பரமாகவே தங்களது நட்பினைத் தொடர்கின்றனர். இந்நிலையில் மீண்டும் மஞ்சள் வீரன் படத்தில் புதிய ஹீரோ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறியிருந்தார் செல்அம்.
தற்போது மஞ்சள் வீரன் படத்தில் புதிய ஹீரோவாக நடிகர் கூல் சுரேஷ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மேலும் கூல் சுரேஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இதில் கூல் ஸ்டார் கூல் சுரேஷ் வெடிக்கும் மஞ்சள் வீரன் என்று அச்சிடப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நடிகர்களின் படங்கள் வாழ்த்துச் செய்தியுடன் அப்டேட் வரும். அந்தவகையில் மஞ்சள் வீரன் படத்திற்கும் வாழ்த்துத் தெரிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.