Sushin Shiyam : திடீர் திருமணம் செய்துகொண்ட ஆவேஷம் பட இசையமைப்பாளர்.. ஃபகத் ஃபாசில் நஸ்ரியா வாழ்த்து
ராகேஷ் தாரா October 30, 2024 06:44 PM

சுஷின் ஷியாம்

மலையாளத்தில் 'கிஸ்மத்' படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் சுஷின் ஷியாம். கும்பலங்கி நைட்ஸ் , ட்ரான்ஸ் , மாலிக் , குருப் , ரோமாஞ்சம் , மஞ்ஞுமெல் பாய்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த பல பாடல்கள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக வைரலாகியுள்ளன. சமீபத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளியான போகன்வில்லா படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்குப் பின் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு தான் எந்த படத்திற்கும் இசையமைக்கப் போவதில்லை என்றும் சிறிது காலம் இடைவெளி எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

சுஷின் ஷியாம் மற்றும் பின்னணி பாடகி உதாரா இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் .இன்று இவர்கள் இருவருக்கும் தங்கள் நெருங்கிய சொந்தங்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சுஷின் ஷியாமின் நெருங்கிய நண்பர்களான ஃபகத் ஃபாசில் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள். மேலும் நடிகர் ஜெயராம் தனது குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.