இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 452.10 அல்லது 0.56% புள்ளிகள் சரிந்து 79,921.85 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 136.50 அல்லது 0.55% புள்ளிகள் சரிந்து 24,336.05 ஆகவும் வர்த்தகமாகியது.
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. உலக பொருளாதார நிலை, அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்வது, அமெரிக்க அதிபர் தேர்தல் ஒட்டிய நிலையின்மை ஆகியவை காரணமாக பங்குச்சந்தை சரிவுடன் இருக்கிறது. Foreign Institutional Investors (FIIs) இந்திய பங்குச்சந்தை ரூ.3,228.08 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ப்ரீ ஓப்பன் செஷனாக 15 நிமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 6 மணி முதல் 6.15 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. block deal window மாலை 5.45 மணிக்கு திறக்கப்படும். 6 மணி வரை நடைபெறும்.
வழக்கமான சந்தை அமர்வு 6.15 மணி முதல் 7.15 மணி வரை நடைபெறும். வர்த்தக மாற்றத்தை ( trade modification) 7.25 மணி வரை மேற்கொள்ளலாம். கடைசியாக நிறைவு அமர்வு (closing session) இரவு 7.25 மணி முதல் 7.35 மணி வரை நடைபெறும்.
இந்த நேரத்தில் பங்குகளை வாங்குவது அல்லது விற்பனை செய்வது என எதுவானலும் அது நிறைவான வளத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
அதானி எண்டர்பிரைசிஸ், டாடா கான்ஸ் ப்ராட், ஹீரோ மோட்டர்கார்ப், பிரிட்டானியா, மாருதி சுசூகி, இந்தஸ்லேண்ட் வங்கி, பாரத் எலக்ட்ரிக்கல்ஸ், அதானி போர்ட்ஸ், ஐ.டி.சி., அல்ட்ராடெக் சிமெண்ட், ஐ.டி.சி., பஜாஜ் ஆட்டோ, டைட்டன் கம்பெனி, லார்சன், கோல் இந்தியா, நெஸ்லே, ரிலையன்ஸ், விப்ரோ, ஹெச்.யு.எல்., ஏசியன் பெயின்ட்ஸ், டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
சிப்ளா, ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்., எஸ்.பி.ஐ. இன்சுரா, ட்ரெண்ட், இன்ஃபோசிஸ், டாகடர் ரெட்டிஸ் லேப்ஸ், ஹெச்.சி.எல். டெக், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எம்&எம், கோடாக் மஹிந்திரா, எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சவ், சன் ஃபார்மா, ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., பஜாஜ் ஃபினான்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், டாடா ஸ்டீல்ம் டெக் மஹிந்திரா, ஹிண்டாலோ, க்ரேசியம், ஜெ.எஸ்.டபுள்யு, டாடா மோட்டர்ஸ்,. பாரதி ஏர்டெல், பி.பி.சி.எல்., அப்பல்லோ மருத்துமனை ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.