Bigg Boss Tamil Season 8 Day 23: வீட்டு பணி டாஸ்கை அசால்ட்டாக வென்ற ஆண்கள் அணி… ஆள்மாறட்டம் டாஸ்கில் வெளுத்து வாங்கிய சௌந்தர்யா!
Tamil Minutes October 30, 2024 04:48 PM

Bigg Boss Tamil Season 8 Day 23 இல் முத்துக்குமார் கேப்பிடன்சியில் கொடுக்கப்பட்ட வேலையை அவரவர் செய்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் வீட்டுப் பணிகளுக்கான டாஸ்க் மட்டும் பிக்பாஸ் அறிவிக்காமல் இருந்தார். அதை அறிவித்துவிட்டார். ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் கையில் ஒரு அட்டைப்பெட்டியை வைத்துக்கொண்டு ஸ்பான்ஞ்பேட்டை வைத்துக்கொண்டு விளையாட வேண்டும். 7 சுற்றுகள் இந்த போட்டியில் நடைபெற்றது.

யாரு அதிகமாக பாயின்ட் எடுக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் என்று பிக் பாஸ் கூறியதால் இந்த டாஸ்க் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. ஆண்கள் அணி அசால்டாக வெற்றி பெற்று வீட்டு பணி டாஸ்க்கில் வென்றனர். இதனால் பெண்கள் அணி தான் இந்த வாரம் முழுவதும் ஹவுஸ் கிளீனிங் டாய்லெட் கிளீனிங் வெசெல் வாஷிங் போன்ற வீட்டு பணிகளை செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் கூறிவிட்டார்.

அதற்கு அடுத்ததாக பிக் பாஸ் ஆள்மாராட்டம் டாஸ்கை அறிவித்திருந்தார். இதில் ஒருவர் மற்றொருவர் கதாபாத்திரத்தை ஏற்று இந்த வாரம் முழுவதும் வேண்டும் நடிக்கவேண்டும் என்பதுதான் டாஸ்க். சௌந்தர்யாவுக்கு சுனிதா கதாபாத்திரமும் ஜாக்குலினுக்கு அன்சிதாவும் ஆனந்திக்கு சௌந்தர்யாவும் சாச்சனாவுக்கு ஆனந்தியும் பவித்ராவுக்கு தர்ஷிகாவும் தர்ஷிகாவும் பவித்ராவும் ரஞ்சித்துக்கு ஜெபரியும் முத்துக்குமாருக்கு ரஞ்சித் என மாறி மாறி விளையாடினார்கள். இதில் சௌந்தர்யா சுனிதா வாக பிச்சு உதறி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு இடத்திலும் சுனிதா மாதிரியே சௌந்தர்யா மெனக்கெட்டு நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். சாச்சனா எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. அடுத்ததாக ரோப் டாஸ்க் நடந்தது. அதில் வீணாக போய் மாட்டிக்கொண்டு அடிபட்டது தான் மிச்சம் என்பது போல சாச்சனா காலில் அடிபட்டது. இனி நாளை எபிசோட்டில் யார் யார் எப்படி தங்களை வெளிக்காட்ட போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.