சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... வாலிபருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை!
Dinamaalai October 30, 2024 04:48 PM

 


தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம்  அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு  4 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் சுதாகர் (25) என்பவரை எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் குற்றவாளியான சுதாகர் என்பவருக்கு 4 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கலா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த  பெண் தலைமை காவலர் சங்கரகோமதி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.