தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைக்கும் இந்த பழம்
Top Tamil News October 30, 2024 09:48 AM

பொதுவாக தைராய்டு நோயால் கருத்தரிப்பதில் பாதிப்பு உண்டாவதோடு ,மாத விடாய் கோளாறுகள் மற்றும் உடல் பருமன் உண்டாகுதல் போன்ற தொல்லைகள் உண்டாகின்றன .
1.மேலும் சிலருக்கு செரிமான கோளாறு ,உடல் வெப்பநிலை உயர்வு ,நடுக்கம் போன்ற பாதிப்புகளும் உண்டாகின்றன .
2.இதற்கு சில வகை உணவுகளை சேர்த்து கொண்டால் இந்த பாதிப்பு குறையும் .


3.உதாரணமாக ஸ்ட்ராபெரி ,காளான் ,பூண்டு ,மாட்டிறைச்சி ,பசலை கீரை ,முட்டை ,தானியங்கள் ,ப்ரோக்கோலி ,தக்காளி ,தேங்காய் எண்ணெய் ,மாட்டு ஈரல் ,கடல் சிப்பி ,கொள்ளு ,போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்ளவும் ,
4.இந்த நோய்க்கு தைராய்டு ஹார்மோன் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உற்பத்தி செய்வதால் இந்தப் பிரச்சனை உண்டாகி படுத்தி எடுக்கிறது  
5.இந்த நோய்க்கு ஆப்பிள் நல்லது ,இதற்கு ஆப்பிள் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக நம்மை வாழ வைக்கும் .
6.மேலும், இந்த நோயால் அவதிப்படுவோர் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெர்ரிகளை உண்ணலாம் .இதை சாப்பிடுவதால், தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைக்கலாம்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.