OTP Traceability: ஒடிபி ஆய்வு நடைமுறை, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு - டிராய் அறிவிப்பு
குலசேகரன் முனிரத்தினம் October 30, 2024 10:44 AM

புதிய திட்டத்தால் ஏற்படக்கூடிய சேவை பாதிப்புகள் குறித்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து காலக்கெடுவை நீட்டிப்பதாக டிராய் முடிவு செய்துள்ளது. வங்கிகள் மற்றும் டெலிமார்க்கெட்டர்கள் உட்பட பல வணிக அமைப்புகள் தொழில்நுட்ப ரீதியாக புதிய மாற்றங்களுக்கு இன்னும் தயாராகாததால், நவம்பர் 1 முதல் டிரேசபிலிட்டி விதியை அமல்படுத்துவது பெரிய அளவிலான செய்தித் தடைகளுக்கு வழிவகுக்கும் என்று டெலிகாம் நிறுவனங்கள் எச்சரித்தன. அதனடிப்படையில் தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய கால அட்டவணை:

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, நவம்பர் 1 ஆம் தேதிக்கான முந்தைய காலக்கெடுவுக்குப் பதிலாக, வரும் டிசம்பர் 1 முதல் டிரேசபிளிட்டி ஆணைக்கு இணங்காத செய்திகள் தடுக்கப்படும்.  பெரும்பாலான டெலிமார்கெட்டர்கள் மற்றும் முதன்மை நிறுவனங்கள் (PEs) இன்னும் தங்கள் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதால், OTPகள் போன்ற முக்கியமான செய்திகளை தடையின்றி வழங்குவதை உறுதிசெய்ய இந்த காலக்கெடுவை நீட்டிக்கும் நடவடிக்கை அவசியம் என்று டெலிகாம் நிறுவனங்கள் எடுத்துரைத்தன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 1.5 முதல் 1.7 பில்லியன் வணிகச்குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக தொழில்துறை மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த எண்ணிக்கையிலான குறுஞ்செய்திகள் தடுக்கப்பட்டால் பயனர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தை நினைத்துப் பாருங்கள். எனவே, பெரிய இடையூறுகளைத் தடுக்க, டெலிகாம் ஆபரேட்டர்கள் டெலிமார்க்கெட்டர்கள் மற்றும் PE களுக்கு  ஸ்டேடஸ் அப்டேட்களை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளனர்.

டிராய் வழிகாட்டுதல்கள்:

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் கோரிக்கைகளை ஏற்று, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் PE-TM (முதன்மை நிறுவனம்-டெலிமார்கெட்டர்) தேவையான முழு நடவடிக்கைகளை விரைவில் உறுதிசெய்யுமாறு கேரியர்களுக்கு டிராய் அறிவுறுத்தியது. இணங்கத் தவறிய நிறுவனங்கள் நவம்பர் 30 வரை தினசரி நினைவூட்டல்களைப் பெறுவார்கள். டிசம்பர் 1 முதல், வரையறுக்கப்படாத அல்லது பொருந்தாத டெலிமார்கெட்டர் இணைப்புகளை கொண்ட செய்திகள்  நிராகரிக்கப்படும் என்று டிராய் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த சமீபத்திய நீட்டிப்பு ஸ்பேமைக் கட்டுப்படுத்த தொழில்துறை இணக்கம் தொடர்பாக டிராய் வழங்கிய இரண்டாவது முறையாகும். முன்னதாக, செய்தி அனுமதிப்பட்டியலை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை ரெகுலேட்டர் நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.