சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் பாலின சமத்துவத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்திய யூனியன் பட்ஜெட் அறிக்கை 2024-25, பாலின பட்ஜெட் அறிக்கையின்படி (ஜிபிஎஸ்), பாலினம் சார்ந்த பட்ஜெட் (gender-responsive budgeting) 6.8 % சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பாலின சமத்துவத்தை பற்றி ஐநா பெண் அதிகாரிகள் கூறுகையில், "பெண்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் தொழில் துறைகளுக்கு அதிக முதலீடுகள் வழங்குவதன் மூலம், அடிமட்டத்தில் உள்ள பெண்களின் மீது கவனம் செலுத்துவது இந்தியாவில் பாலின சமத்துவத்தை துரிதப்படுத்துகிறது. ஆனால், சில சமூக விதிமுறைகள், மட்டுப்படுத்தப்பட்ட தொழிலாளர் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் முழு பாலின சமத்துவத்திற்கு இடைவெளிகளாக உள்ளது" என்று தெரிவித்திருந்தனர்.
UN நாடுகளின் மகளிர் உத்திசார் கூட்டமை இயக்குநரான டேனியல் சீமோர் மற்றும் இந்தியாவில் உள்ள ஐநா பெண்களுக்கான பிரதிநிதியான சூசன் ஜேன் பெர்குசன் ஆகிய இருவரும் ஒரு நேர்காணலில் பாலின சமத்துவத்தின் முன்னேற்றங்கள் அதை முழுமையாக அடைவதற்கான சவால்கள் பற்றிய சிந்தனைகளை தெரிவித்திருந்தனர்.
இந்த உரையாடலில், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலினம் சார்ந்த (Gender Responsive) கொள்கைகளில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரித்திருப்பதை எடுத்துக்கூறினர். ஆனால், ஆழமாக வேரூன்றிய சமூக விதிமுறைகளும், வரையறுக்கப்பட்ட நிதி உதவியும் முழு பாலின சமத்துவத்தை அடைய தடைகளாக உள்ளது என்பதையும் வலியுறுத்தி இருந்தனர்.
பாலின சமத்துவ யூனிட் பட்ஜெட்டில் இந்த அதிகரிப்பு விகிதம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் குறிப்பிட்ட தேவைகளை நோக்கி இயக்கப்படுவது முக்கியமானது என்று பெர்குசன் குறிப்பிட்டார். கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றில் முழு பாலின சமத்துவத்தை அடைவதற்கான குறைகளை பூர்த்தி செய்ய பட்ஜெட்டை தொடர்ந்து விரிவுபடுத்துவது அவசியம் என்று கூறினார்.
பொது முதலீட்டில் அதிகரிப்பு இருந்தபோதிலும், முழுமையான பாலின சமத்துவத்தை அடைவதற்கும், பெண்களுக்கு சொந்தமான வணிகங்களுக்கான நிதி அணுக்களை அதிகரிப்பதில் தனியார் துறையில் பங்களிப்பை எடுத்துரைத்து, “பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளுக்கான முதலீடுகளை மேம்படுத்த இந்திய வணிகங்களுடன் நாங்கள் தீவிரமாக ஒத்துழைத்து வருகிறோம்" என்று கூறினார் பெர்குசன்.
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைப் பற்றி பேசுகையில், சில மாநிலங்கள் பாலின சமத்துவத்தை அடைந்துள்ளதாகவும், உலக அளவில் இது சிறந்த நடைமுறை என்றும் கூறினார். ஆனால், தேசிய அளவில் இந்த பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளும் தேவை என்றார்.
சீமோர்சீமோர் மற்றும் பெர்குசன் இருவருமே, "பெண்களைப் பாதுகாப்பதற்கான பிரத்யேக சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். பாலின அடிப்படையிலான வன்முறை ஒரு தொடர்ச்சியான பிரச்னை. இது பெண்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது." என்றனர்.
``மத்திய பிரதேசத்தின் பெண்கள் தலைமையிலான காவல் நிலையங்கள் குறிப்பாக பெண்களுக்கான, 'பிங்க் காவல் நிலையங்கள்', ஹெல்ப் லைன்கள் மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர்கள் போன்ற திட்டங்களை அரசு கொண்டுள்ளது. UN women India இதனை ஆதரிக்கிறது. இந்தியாவில் ஐநா பணிகளில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்புக்கான தடைகளை நீக்க முயற்சிக்கிறது.
குழந்தை பராமரிப்பு, பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் பணியிட பாதுகாப்பு ஆகியவற்றில் சரியான முதலீடுகள் செய்வதன் மூலம் பெண்கள் அதிக பொருளாதார வாய்ப்புகளை அணுக முடிகிறது" என்று பெர்குசன் கூறினார்.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பணியிடத் துன்புறுத்தலுக்கு தீர்வு காண அரசுடன் இணைந்து ஐநா பெண்கள் தொழிற்சங்கங்கள், அரசு வணிகங்கள், சிவில் சமூக அமைப்புகளில் பாதுகாப்பான பணியிடங்களை அமைத்து வருகின்றனர். இத்தகைய முயற்சிகள் இந்த தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காலநிலைமாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்துப் பேசுகையில் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் பெண்களை ஈடுபடுத்துவது, தொழில்துறையில் பெண்கள் முன்னோடியாக திகழ்வது... அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று விளக்கினார்.
“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடான இந்தியா சர்வதேச மன்றங்களில் பாலின சமத்துவத்தை எப்போதும் ஆதரித்து வருகிறது.” இந்தியா ஒரு முன்னணி குரலாக இருப்பதனால் அதன் வெற்றிகள், கற்றுக்கொண்ட பாடங்களை பகிர்ந்துகொள்து, வழியில் உள்ள சவால்களை எதிர்கொள்ள சக்தி வாய்ந்த வாய்ப்பு உள்ளதாக பெர்குசன் கூறினார்.
பெர்குசன் சுருக்கமாக, “பாலின சமத்துவத்தில் இந்தியாவின் முன்னேற்றம் ஊக்கமளிக்கிறது. ஏற்கனவே சாதித்துள்ளவற்றை பாதுகாக்கவும், மீதமுள்ள சவால்களை எதிர்கொள்ளவதற்கு சமூக விதிமுறைகள், அமைப்பு ரீதியான தடைகள், பொருளாதார தடைகள் மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளின் செயலில் ஈடுபாடு ஆகிவற்றைக் கையாளும் ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படும்” என்று கூறினார்.