மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் வெளியே NGO-வை சேர்ந்தவர்கள் இலவசமாக நோயாளிகளுக்கும் அவருடன் இருக்கும் உறவினர்களுக்கும் உணவு வழங்கினர். அந்த உணவை வாங்க பலரும் வரிசையில் நின்றனர். அப்போது அந்த வரிசையில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இருந்தார்.
அந்த பெண்ணிடம் உணவை விநியோகித்த நபர் ஜெய் ஸ்ரீராம் என்று உச்சரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுக்க கண்டிப்பாக ஜெயஸ்ரீராம் என்று கூற வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்தப் பெண் அவ்வாறு கூற முடியாது என்று கூறிவிட்டார்.
இதனால் இலவச உணவு வழங்க முடியாது வரிசையில் இருந்து நகர்ந்து செல்லுமாறு அந்த பெண்ணை விரட்டி உள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் காணொளியாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது பலரும் உணவு விநியோகித்த நபருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.