உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரசித்தி பெற்ற ராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக அயோத்தி செல்கிறார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் அயோத்தி ராமர் கோவில் இரு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளது.
அதன்படி நேற்று மாலை அயோத்தி ராமர் கோவில் தீபங்களால் ஜொலித்த நிலையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதாவது சரயு நதி கரையின் ராம்கி பைடி உட்பட 52 படித்துறைகளில் 22 லட்சத்திற்கும் அதிகமான மண் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்ட நிலையில் இது ட்ரோன் மூலமாக கண்காணிக்கப்பட்டது. இது உலக சாதனை படைத்துள்ளது. இதேபோன்று 1121 வேதாச்சாரியார்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்தும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஒரே நேரத்தில் அயோத்தி கோவில் இரு கின்னஸ் சாதனைகள் படைத்துள்ளது.