மின்சாரம் தாக்கி SI உயிரிழப்பு…. குடும்பத்திற்கு ரூ.25,00,000 நிதி…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!
SeithiSolai Tamil October 31, 2024 10:48 PM

நேற்று அக்டோபர் 30 அன்று பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று விழா முடிந்து பரமக்குடியில் கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடந்தது.

துணை ஆய்வாளரான சரவணன் என்பவர் கொடி கம்பம் ஒன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொடி கம்பம் மின்சார கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து எஸ்ஐ சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சரவணன் அவர்களின் இறப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். SI சரவணன் மரணம் காவல்துறைக்கும் குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்டதோடு அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.