மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பனை கொன்ற இளைஞர்
Top Tamil News November 01, 2024 12:48 AM

தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பனை  மதுபோதையில் இருந்தபோது திட்டமிட்டு பாறாங்கல் மற்றும் டைல்ஸ் கல்லால் முகத்தை சிதைத்து கொலை செய்த இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூவத்தூரில்  முகம் சிதைக்கப்பட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பனை  மதுபோதையில் இருந்தபோது திட்டமிட்டு கள்ளக்காதலனை பாறாங்கல் மற்றும் டைல்ஸ் கல்லால் முகம் சிதைத்து  திவ்யாவின் கணவன் சூர்யா கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த வேப்பஞ்சேரி பகுதியை சேர்ந்தவர், குமார் இவரது மகன் பிரதீப்(வயது25). இவர் வேலைக்கு ஏதும் சொல்லாமல் இருந்து வருகிறார் எனக் கூறப்படுகிறது இந்நிலையில் இவர் நேற்றைய முன் தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் பிரதீப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கூவத்தூரில் குடியிருப்புகளின் அருகேயுள்ள முட்புதரில் முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக கூவத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பிறகு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கூவத்தூர் போலீசார் பார்த்தபோது இறந்து கிடந்தது பிரதீப் என உறுதி செய்து கொண்டு, பிறகு  அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீசார் பிரதீப்பின் நண்பர்கள்  பிடித்து விசாரணை நடத்தியதில் கள்ளத்தொடர்பால் இக்கொலை நடந்துள்ளது அம்பலமானது. சூர்யாவின்  நண்பரான கூவத்தூர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவர், சூர்யாவின் வீட்டுக்கு  திவ்யாவை பார்க்க பிரதீப் அடிக்கடி வந்து செல்வாராம். அப்போது சூர்யாவின் மனைவி திவ்யாவுக்கும் பிரதீப்புக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளத்தொடர்பு விவகாரம் சூர்யாவுக்கு தெரிய வரவே தனது மனைவியையும்,  பிரதீப்பை கண்டித்துள்ளார். 

இந்நிலையில் சம்பவத்தன்று பிரதீப் கூவத்தூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சூர்யா மற்றும் தனது நண்பன் பிரதீப் (28), மற்றும் விஷால் (17) வயது ஆகியோருடன் மது அருந்தி உள்ளார். அப்போது பிரதீப்புக்கு மது போதை தலைக்கேரிய நிலையில் தனது மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டிக்குமாறு பிரதீப்புக்கு சூர்யா அறிவுரை கூறி கண்டித்துள்ளார். மதுபோதை தலைக்கேறி வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. ஒரு கட்டத்தில் சூர்யா விஷால் இருவரும் சேர்ந்து அங்குள்ள கருங்கல் மற்றும் டைல்ஸ் கல்லை எடுத்து பிரதீப் தலையில் ஓங்கி அடித்துள்ளார். அதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். பிறகு டைல்ஸ் கல்லால் அவரது முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பி சென்றுள்ளார், கொலைக்கு உடைந்தயாக இருந்த சிறார் விஷாலை கைது செய்தனர் விசாரணையில் இவர் மீது கூவத்தூர் காவல் நிலையம் உள்ளிட்ட பல காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்..

 மாமல்லபுரம் டி.எஸ.பி. ரவி அபிராம் தலைமயிலான இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடிய நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சூர்யாவை சேலத்தில் பதுங்கி இருந்த  சூர்யாவை போலீசார் கைது செய்து பின்னர் கூவத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் மேற்கண்ட தகவல் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளி சூர்யா, மற்றும் விஷால் இருவரையும் திருப்போரூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர். பிறகு சூர்யா செங்கல்பட்டு கிளை சிறையிலும், விஷால் செங்கல்பட்டு சிறார் சிறையிலும் அடைக்கப்பட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில்  நண்பனை நண்பர்களே கொலை செய்த சம்பவம்  கூவத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.