'அதெல்லாமே பொய்யா கோபா...ல்' கூகுள் பண்ண வேலையைப் பாருங்க.. ரூ.26 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
Dinamaalai November 01, 2024 12:48 AM

அப்போ அதெல்லாமே பொய்யா கோபா........ல் என்று கேட்க தோன்றுகிறது. வாயுத்தொல்லையா, நெஞ்செரிச்சலா என்று எதற்கெடுத்தாலும் கூகுள் டாக்டரைத் தேடுகின்றனர். ஹோம்வொர் துவங்கி பலவற்றுக்கும் உடனடி தீர்வாக கூகுளில் தான் தேடிப் பார்க்கின்றனர். அந்தளவுக்கு பரவலாக பயன்படுத்தப்படும் கூகுளில், தனது சொந்த ஷாப்பிங்கை மட்டுமே கூகுள் விளம்பரப்படுத்துகிறது என்பது நிரூபணமாகி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ரூ.26 கோடி அபராதம் விதித்து ஐரோப்பா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த சிவான்-ஆடம் தம்பதியினர் 2006-ம் ஆண்டு பவுண்டம் என்ற விலை ஒப்பீட்டு தளத்தைத் தொடங்கினர். விலை ஒப்பீடு, ஷாப்பிங் போன்ற முக்கிய சொற்றொடர்களை கூகுளில் தேடியபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் கூகுளில் பவுண்டம் இணையதளம் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கூகுளின் தானியங்கி ஸ்பேம் வடிப்பானால் விதிக்கப்பட்ட அபராதம் காரணமாக அவர்களின் இணையதளம் எதிர்பாராத வீழ்ச்சியைச் சந்தித்தது. மேலும் கூகுள் அவர்களின் தளத்தை மிகவும் குறைவாக மதிப்பிட்டுள்ளது. முதலில் தொழில்நுட்பக் கோளாறு என்று நினைத்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் கூகுள் அபராதத்தை நீக்கவில்லை.

இதன் காரணமாக பவுண்டம் இணையதளத்தின் வாடிக்கையாளர்கள் குறையத் தொடங்கினர். தம்பதியினர் கடந்த 2010ல் இது குறித்து ஐரோப்பிய ஆணையத்தை அணுகினர். பல கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணைக்குப் பின்னர், கூகுள் தனது சொந்த ஷாப்பிங் சேவையை மட்டுமே விளம்பரப்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

2017 ம் ஆண்டில், கூகுள் அதன் ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதற்காக ஆணையம் கூகுளுக்கு 2.4 பில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,172 கோடி) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து கூகுள் மேல்முறையீடு செய்தது. ஐரோப்பிய நீதிமன்றம் கூகுள் செய்த மேல்முறையீட்டை நிராகரித்து, அபராதம் செலுத்த வேண்டும் என்பதை மீண்டும் உறுதி செய்தது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.