அதிர்ச்சி... தறிகெட்டு ஓடிய சொகுசு கார்.. ஏரியில் மூழ்கி நண்பர்கள் 3 பேரும் பலியான சோகம்!
Dinamaalai October 31, 2024 07:48 PM

தறிகெட்டு அதிவேகத்தில் ஓடிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சொகுசு கார் ஒன்று ஏரிக்குள் பாய்ந்ததில், நீரில் மூழ்கி நண்பர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள  பாகலூரில் ஏரிக்கரை மீது சென்றுக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஏரியில் பாய்ந்தது. இதில் நீரில் மூழ்கி 3 நண்பர்கள் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மகேஷ் மற்றும் இவரது நண்பர்கள் லிங்க்டோ, சின்னஎலசகிரியைச் சேர்ந்த யோகேஸ்வரன் ஆகிய 3 பேரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். 

இந்நிலையில் நேற்றிரவு 3 பேரும் காரில் பாகலூர் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது வெங்கடராயபுரம் ஏரிக்கரையில் இவர்களது கார் சென்றுக் கெண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஏரிக்குள் பாய்ந்தது. 

இதில் 3 பேரும் காரிலிருந்து வெளியே வரமுடியாமல் தண்ணீருக்குள் மூழ்கினர். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஏரிக்குள் கார் பாய்ந்தது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிரேன் மூலம் மகேஷ், லிங்க்டோ ஆகிய 2 பேரை காருடன் சடலமாக மீட்டனர்.

நீர் மூழ்கிய யோகேஸ்வரனை நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை சடலமாக மீட்டனர். பின்னர் 3 பேர் உடல்களையும் பாகலூர் போலீசார் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஏரிக்குள் கார் பாய்ந்த நிலையில், நண்பர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.