அதிர்ச்சி... தேவர் குருபூஜையில் போலீஸ் எஸ்.ஐ. மின்சாரம் தாக்கி மரணம்!
Dinamaalai October 31, 2024 07:48 PM

நேற்று தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடந்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாள, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழாவும், 62வது குருபூஜை விழாவும் நேற்று நடைபெற்றது. அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நேற்று காலை முதலே தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் மரியாதை செலுத்தினர். 

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் சரவணன், கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.