சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு..க தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 'கள ஆய்வுக்குழு' ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது,
* கழகத்தில் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது சம்பந்தமான கருத்துகளை வழங்க வேண்டும்.
* புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டைகள், கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* அதிமுகவில் அமைக்கப்பட்ட கள ஆய்வு குழு டிசம்பர் 7-ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
* 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு விரைந்து ஆற்ற வேண்டும்.
* மாவட்ட செயலாளர்கள் மீது தவறு இருந்தால் ஆய்வு அறிக்கையை வைத்து அப்பகுதியில் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கே.பி. முனுசாமி, M.L.A., கழகப் பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., கழக துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. பி. தங்கமணி, M.L.A., கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. D. ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. சி.வி சண்முகம், M.P., கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. செ. செம்மலை, கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. வரகூர் அ. அருணாசலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.