அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. காசாவில் 44 பேரும்.. லெபனானில் 33 பேரும் உயிரிழந்த சோகம்!
Dinamaalai November 14, 2024 12:48 AM

காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பையும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பையும் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாக்கப்பட்ட மனிதாபிமானப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர். காஸாவுக்குள் மேலும் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த பின்னர் இஸ்ரேலுக்கான இராணுவ ஆதரவைக் குறைக்கப் போவதில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

லெபனானில் ஹிஸ்புல்லாக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியான டாரியில் இஸ்டெல் தாக்குதல் நடத்தியுள்ளது. இங்குள்ள 11 வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஹிஸ்புலாவில் உள்ள ஒரு கட்டமைப்பு, கட்டளையிடும் மையம் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.