இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி மற்றும் குஜராத் அரசின் அமைச்சருமான ரிவாபா ஜடேஜா (Rivaba Jadeja), இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் குறித்துப் பேசிய கருத்துகள் தற்போதுப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நிகழ்வில் பேசிய அவர், “எனது கணவர் ஜடேஜா, கிரிக்கெட் விளையாடுவதற்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்றப் பல நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தாலும், தனதுப் பொறுப்புகளைப் புரிந்துகொண்டதால், இன்றுவரை எந்தவிதமான தீய செயல்களிலும் ஈடுபட்டதில்லை” என்று ஜடேஜாவுக்குப் ‘நல்ல சான்றிதழ்’ வழங்கியுள்ளார்.
ஆனால், மற்ற வீரர்களைக் குறித்துப் பேசிய ரிவாபா, “அதேநேரத்தில், அணியின் மற்ற அனைவரும் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள், ஆனால் அவர்களதுக் குடும்பத்தினரிடமிருந்து எந்தத் தடையும் இல்லை” என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“நாம் வாழ்க்கையில் முன்னேறியவுடன், அடித்தளமாக இருப்பதும், நமது கலாசார வேர்களை நினைவில் கொள்வதும் முக்கியம்” என்றும் அவர் பேசியுள்ளார்.
அவரது இந்தக் கருத்தால், இந்திய அணியின் மற்ற வீரர்கள் மற்றும் அவர்களதுக் குடும்பத்தினர் மத்தியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.