பிரபல நடிகை தேவயானி குறித்து அவரது கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. ‘வாவ் தமிழா’ யூடியூப் சேனலுக்கு ராஜகுமாரன் அளித்த பேட்டியில், தனது குடும்பம் மற்றும் வருமானம் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
இயக்குனராகும் முன் தனது மாதச் செலவே ₹1500 தான் என்றும், திரைப்படங்கள் மூலம் சிறுக சிறுகச் சேமித்த பணமே தனது திருமண வாழ்வில் கைகொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை தேவயானியைத் திருமணம் செய்தபோது அவர் “வெறும் கையை வீசிக்கொண்டுதான் வந்தார்” என்றும், “உடுத்தக்கூட துணி இல்லாமல் சினிமாவில் வருவதுபோல் வந்தார்” என்றும் ராஜகுமாரன் உணர்ச்சிப்பூர்வமாகக் கூறியுள்ளார். தான் வங்கியில் சேமித்து வைத்திருந்த ₹3 லட்சம் ரூபாய்தான் தேவயானிக்கு உதவியதாகவும் அவர் பேசியுள்ளார்.
தேவயானி புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில், அவர் கையில் பணம் இல்லாமலா இருந்தார் என்ற கேள்வியுடன் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதே சமயம், தேவயானி கூட ஆரம்ப காலத்தில் தாங்கள் கஷ்டப்பட்டதாகக் கூறியுள்ளதால், ராஜகுமாரனின் கூற்றில் உண்மை இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.