தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. முன்னதாக தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக உருவாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உருவாகிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வருகிற 15 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு தினங்களில் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.