மதுரா டிராவல்ஸ் பாலன் என்று அனைவராலும் அழைக்கப்படும் விகேடி பாலன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது.. அவரது இறுதிச் சடங்குகள் இன்று சென்னை மந்தைவெளியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1954ல் திருச்செந்தூரில் பிறந்த வி.கே.டி. பாலன் 1981ம் ஆண்டு சென்னை வந்தார். சென்னை எழும்பூரில் உணவு, தங்குமிடமின்றி தவித்த வி.கே.டி. பாலன், சென்னையில் வெளிநாடு செல்லும் மக்களுக்காக வரிசையில் நின்று விசா எடுத்துக் கொடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தார். வரிசையில் நிற்பதற்காக வருமானம் பெற துவங்கிய வி.கே.டி. பாலன் அதன் பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கி சுற்றுலா துறையில் முன்னோடியாக வளர்ச்சி பெற்றார்.
தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றுள்ள மதுரா டிராவல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் வி.கே.டி. பாலன் கடந்த சில காலமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நவம்பர் 11ம் தேதி காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று நவம்பர் 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை மந்தைவெளிபாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வி.கே.டி. பாலன் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.