இப்படி ஒரு நிலை யாருக்கும் வர கூடாது...! கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்..!
Newstm Tamil January 03, 2025 09:48 AM

உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி.

அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் நேற்று மருத்துவமனையிலிருந்து இந்திய ஜெர்சி அணிந்து டிஸ்சார்ஜ் ஆனார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

இந்நிலையில், வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின.

எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அதுகுறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதற்கு முன் ஐபோன் பயன்படுத்திய நிலையில், தனது வீட்டைப் பழுதுபார்ப்பதற்கு ரூ.15,000 கட்டத் தவறியதால், அதற்குப் பதிலாக வினோத் காம்ப்ளியின் ஐபோனை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்ளி, இப்போது அதனையும் தொலைத்துவிட்டு பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தை தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

பிசிசிஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் வீடும் கடனில் உள்ளது. சமீபத்தில் காம்ப்ளியின் மனைவி அளித்த பேட்டியில், ரூ.18 லட்சம் வீட்டுக் கடனுக்காக வங்கி தங்களை தொந்தரவு செய்வதாகக் கூறியிருந்தார்.

எனினும் ஒரு அரசியல்வாதி சமீபத்தில் இவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தாலும், அது வீட்டுக் கடனை அடைக்கப் போதுமானதாக இல்லை என்று வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.