ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்தது. அடுத்து இலக்கைத் துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 23 வயதாகப் போகும் ரஹ்மானுல்லா குர்பாஸின் 8வது சதமாக பதிவாகியுள்ளது. இந்த சதம் அடித்ததன் மூலம் மிகவும் இளம்வயதில் அதிக சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
22 வயதில் அதிக சதங்கள் அடித்தவர்கள்
ரஹ்மானுல்லா குர்பாஸ்-8 சதங்கள்
சச்சின் டெண்டுல்கர்-8 சதங்கள்
குயிண்டன் டிகாக்-8 சதங்கள்
விராட் கோலி-7 சதங்கள்
பாபர் அசாம்-6 சதங்கள்
உபுல் தரங்கா-6 சதங்கள்
ரஹ்மானுல்லா குர்பாஸ் 8 வது சதத்தை நிறைவு செய்யும்போது அவருக்கு வயது 22 ஆண்டுகள் 357 நாட்கள். அதேபோல சச்சினும் 22 ஆண்டுகள் 357 நாள்களில் 8 சதங்கள் அடித்துள்ளனர். இதனால் இருவரும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 22 ஆண்டுகள் 312 நாள்களில் 8 சதங்கள் அடித்து தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக இந்திய வீரர் விராட் கோலி 23 ஆண்டுகள் 27 நாள்களிலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 23 ஆண்டுகள் 280 நாள்களிலும் 8-வது சதத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிக சதம் எடுத்தவர்கள் பட்டியலில் ரஹ்மானுல்லா குர்பாஸ் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து முஹமது ஷேசாத் 6 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.