கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு சவுதி அரேபியா சிறுவனை கொலை செய்து வழக்கில் ரஹீம் சுமார் 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறுவனின் குடும்பத்தினர் பொது மன்னிப்பு வழங்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் அப்துலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக கொடுக்க முன் வந்தால் அப்துலுக்கு மன்னிப்பு வழங்க தாங்கள் தயாராக இருப்பதாக சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதனால் ரியாத்தில் செயல்படும் இந்திய அமைப்புகள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என நிதி உதவி அளித்தனர். ஒரே வாரத்தில் 34 கோடி நிதி திரண்டது. அந்த தொகையை சவுதி அரேபியா குடும்பத்தினரிடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நீதிமன்றம் மரண தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த நிலையில் அப்துலின் தாய் பாத்திமா, சகோதரர் ஆகியோர் அப்துல்லா சந்தித்து பேசி உள்ளனர். சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு அப்துல் அவரது குடும்பத்தினை சந்தித்துள்ளார். அந்த சிறுவனின் குடும்பத்துக்கு பணம் கொடுத்து விட்டாலும் சவுதி அரேபிய சட்டப்படி சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். விரைவில் அப்துல் விடுவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.