இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தை எடுத்தே தீருவேன் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றாராம் நடிகர் தனுஷ்.
நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் மிக பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் தனுஷ் தற்போது இயக்குனராகவும் அசத்தி வருகின்றார். கையில் ஒரு டஜன் படங்களை வைத்துக் கொண்டிருக்கும் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் மிக பிஸியாக நடித்து வருகின்றார். இயக்கம் ஒருபுறம், மற்ற இயக்குனர்களின் படங்களில் என்று நிற்பதற்கு கூட அவருக்கு நேரமில்லை.
இதையும் படிங்க:
இயக்கும் படங்கள்: தன்னுடைய 50-வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தார். இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது. இதனால் தொடர்ந்து படங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தன்னுடைய 3-வது படமான நிலவுக்கு என்னுடைய என்மேல் கோபம் என்கின்ற படத்தை ஏறத்தாழ எடுத்து முடித்து விட்டார்.
இப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகின்றது. இப்படத்தை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் 50 சதவீதம் முடிந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிக்கும் படங்கள்: இது ஒரு புறம் இருக்க தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படம் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தன்னுடைய 55 படத்திலும் நடிக்க இருக்கின்றார்.
இளையராஜாவின் பயோபிக்: இதற்கு இடையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்திலும் அடுத்தடுத்து நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் சமீபத்தில் ட்ராப் ஆகிவிட்டதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் நடிகர் தனுஷுக்கு இந்த திரைப்படத்தை கைவிடுவதற்கு மனசே இல்லையாம்.
அருண் மாதேஸ்வரன்: இதனால் சரியான தயாரிப்பு நிறுவனத்தை அவர் தேடி வருவதாக கூறப்படுகின்றது. இது ஒரு புறம் இருக்க இளையராஜா இயக்குனர் அருண் மாதேஸ்வரனை அழைத்து அடுத்த ஒரு வருடங்கள் நீ என்னுடன் தான் இருக்க வேண்டும். நான் எப்போதெல்லாம் அழைக்கின்றேனோ? அப்போதெல்லாம் வரவேண்டும் என் நினைவிற்கு வரும் விஷயங்களை நான் உங்களிடம் கூறுகின்றேன். அதனை நோட் பண்ணிக் கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறாராம்.
இதனால் இயக்குனர் அடுத்த ஒரு வருடம் இளையராஜா பின்னாலே சுற்ற வேண்டுமா என்கின்ற யோசனையில் இருக்கிறாராம். அதற்கு காரணம் இளையராஜாவுக்கு எப்போது கோபம் வரும் என்பது யாருக்குமே தெரியாதாம். இளையராஜா கூறியதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருக்கின்றதாம்.
இதையும் படிங்க:
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஒரே நேரத்தில் இளையராஜாவிடம் அனைத்து தகவலையும் கேட்பதால் அவருக்கு அது சரியாக ஞாபகம் வருவது இல்லையாம். அதனால் எனக்கு ஞாபகத்திற்கு வரும்போது உன்னை அழைக்கின்றேன். நீ வந்து அதை எழுதிக் கொண்டு செல் என்று கூறியிருக்கிறாராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாராம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.