துப்பாக்கி படத்தில் விஜயே இல்லை!.. அமரன் பட இயக்குனர் சொல்றத கேளுங்க!..
CineReporters Tamil November 13, 2024 03:48 AM

Thuppakki movie: ஒரு இயக்குனர் உருவாக்கிய கதையில் எந்த நடிகர் நடிப்பார் என்றே கணிக்க முடியாது. ஒரு ஹீரோவை மனதில் வைத்து ஒரு இயக்குனர் கதையை எழுதுவார். ஆனால், அதில் அந்த நடிகரே நடிப்பார் என சொல்ல முடியாது. அந்த கதை ஹீரோவுக்கு பிடிக்கமால் போகலாம்.

அல்லது கதை பிடித்திருந்தாலும் மற்ற படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் இல்லாமல் இருக்கலாம். அதேநேரம், ஒரு ஹீரோவுக்காக ஒரு இயக்குனர் காத்திருக்கவும் முடியாது. எனவே, எந்த நடிகர் நடிக்க முன் வருகிறாரோ அவரை வைத்துதான் படம் எடுக்க முடியும்.

இதையும் படிங்க:

பொதுவாக ஒரு கதை பல நடிகர்களிடமும் போகும். எல்லாம் செட் ஆகி வரும்போதுதான் அது சினிமாவாக மாறும். அஜித்துக்கு சொல்லப்பட்ட கதையில் சூர்யா நடித்திருக்கிறார். விஜய்க்கு சொல்லப்பட்ட கதையில் விக்ரம் நடித்திருக்கிறார். இது சினிமாவில் சகஜம். விஜய் சில நாட்கள் நடித்துவிட்டு வெளியேறிய உன்னை நினைத்து படம் சூர்யா நடித்து வெளியானது.

விஜயின் சினிமா கெரியரில் முக்கிய படமாக அமைந்தது துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் 2012ம் வருடம் வெளியானது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வரும் விஜய் ஒரு தீவிரவாத கும்பலை களையெடுப்பதுதான் இப்படத்தின் கதை.

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்தவர்தான் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘துப்பாக்கி படம் ஹிந்தியில்தான் உருவாகவிருந்தது. கதை பற்றி ஆலோசனை செய்யும்போது ‘இந்த கதையை தமிழில் பண்ணா எப்படி இருக்கும்?.. யார் நடிச்சா சரியா இருக்கும்?’ என முருகதாஸ் சார் கேட்டார்.

‘விஜய் நடிச்சா சரியா இருக்கும்’ என நானும், அஜய் ஞானமுத்துவும் சொன்னோம். அதோடு விஜயின் அப்பா எஸ்.ஏ.சியும் முருகதாஸுக்கு போன் செய்து ‘விஜய்க்கு எதாவது கதை இருக்கா?’ எனக்கேட்டார். அதனால ஹிந்திக்கு உருவாக்கின கதையை விஜய்க்காக எடுத்தோம்’ என சொல்லி இருக்கிறார். துப்பாக்கி படம் தமிழில் ஹிட் அடித்ததால் ஹிந்தியில் உருவாகி அதில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.