கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 2026க்கு பிறகு என்னை சுற்றவிட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விட்டால் வேறு கட்சிகள் இல்லை என்ற மனநிலையை கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி மாற்றும். வணங்குவதற்கு பல சாமி வாழ்வதற்கு ஒரே பூமி. அதாவது நாம் வணங்க பல சாமிகள் இருந்தாலும் வாழ்வதற்கு ஒரே ஒரு பூமி தான் உள்ளது. நாங்கள் மக்களை நேசிக்கிறோம்.
மக்களை மட்டும் நம்புகிறோம். எனவே வருகிற தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடுவோம் என்றார். வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று சீமான் தற்போது அறிவித்துள்ளார். மேலும் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் விஜயின் முதல் மாநாட்டுக்கு பிறகு சீமான் அவரை விமர்சிக்க தொடங்கிவிட்டார். இந்த நிலையில் தற்போது 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று சீமான் அறிவித்துள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.