தாய்லாந்து நாட்டில் ஒரு பெண்ணுக்கு தீராத அடிவயிற்று வலி இருந்துள்ளது. அந்தப் பெண் பல வருடங்களாக வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இது தொடர்பாக அது இண்டிபெண்டன்ட் செய்து நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அந்தப் பெண்ணுக்கு பிரசவத்தின் போது ஆபரேஷன் நடந்தது. அப்போது ஆபரேஷன் செய்யும் ஊசியை மருத்துவர்கள் தவறுதலாக பெண்ணின் பிறப்புறுப்பில் வைத்து விட்டனர். இதனால்தான் அந்த பெண்ணுக்கு வயிறு வலி இருந்தது. அதாவது தையல் போடும்போது தவறுதலாக பிறப்புறுப்பில் ஊசி நுழைந்துவிட்டது.
அந்த டாக்டர் கையை உள்ளே நுழைத்து எவ்வளவோ அதனை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் ஊசி இருக்கும் இடம் தெரியாததோடு அதற்கு மேல் முயற்சி செய்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் என்பதால் அப்படியே விட்டுவிட்டு தையல் போட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த ஊசியை தவறுதலாக பெண்ணின் பிறப்புறுப்பில் வைத்து விட்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கு தற்போது 36 வயது ஆகிறது. இந்த சம்பவம் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக நடந்துள்ளது.
அந்தப் பெண் 18 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் பின்னர் ஒரு அறக்கட்டளையை தொடர்பு கொண்டு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோதுதான் ஊசி இருந்தது தெரிய வந்தது. அவர் அறுவை சிகிச்சை செய்வதற்கு அந்த அறக்கட்டளை உதவி செய்த நிலையில் ஊசி தொடர்ந்து இடம் மாறியதால் ஆபரேஷன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து 4 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் மிகவும் ஏழையான அவரால் மருத்துவ செலவை பராமரிக்க முடியாததால் அறக்கட்டளை உதவியது.
இந்த செய்தி சமூக வலைதளத்தில் பரவியதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டங்கள் குவிந்து வருகிறது. மேலும் அந்த பெண்ணுக்கு மருத்துவமனை சார்பில் ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டதா இல்லையா போன்ற விவரங்கள் தெரியவரவில்லை.