சீன நாட்டில் உள்ள குஹாய் நகர் பகுதியில் ஒரு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்திற்கு வெளியே நேற்று இரவு சுமார் 7:30 மணியளவில் ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். சுமார் 70-க்கும் மேற்பட்டவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு கார் கூட்டத்திற்குள் மோதியது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 35 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் 43 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் அந்த காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பென் (62) என்பவரை கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டவர் கோமா நிலையில் இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் விவாகரத்தின்போது சொத்து பிடித்ததில் அவருக்கு திருப்தி இன்மை ஏற்பட்டதால் காரை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.