பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் மார்கோ கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஈக்வடார் மற்றும் எஃப்சி சின்சினாட்டி அணிக்காக விளையாடிய கால்பந்து வீரர் மார்கோ அங்குலோ, கார் விபத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த மற்றொரு கால்பந்து வீரர் ராபர்டோ கபேசாஸ் ஏற்கனவே மரணம் அடைந்தது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
22 வயதான மார்கோ அங்குலோவின் கார் அக்டோபர் 7 ஆம் தேதி குய்டோவின் தென்கிழக்கு ரூமினுகாய் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ஓட்டுநர் மற்றும் மற்றொரு கால்பந்து வீரர் ராபர்டோ கபேசாஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மார்கோ அங்குலோ தலையில் பலத்த காயங்களுடனும், நுரையீரல் அடைப்புடனும் மீட்கப்பட்டு ஒரு மாத காலம் கோமா நிலையில் இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்குலோ ஈக்வடார் லீக் சாம்பியன்களான LTU க்காக விளையாடினார். க்யூட்டோ MLS அணியான FC சின்சினாட்டிக்காகவும் விளையாடினார். மார்கோ அங்குலோ ஈக்வடார் அணிக்காக நவம்பர் 2022 இல் ஈராக் அணிக்கு எதிராக விளையாடினார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். அதற்கு முன், அவர் ஈக்வடார் 17 வயதுக்குட்பட்ட மற்றும் 20 வயதுக்குட்பட்ட அணிகளுக்காக விளையாடினார்.