இஸ்ரேல், பாலஸ்தீனம், காசா விடம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை ஓராண்டு காலமாக நடைபெற்ற தாக்குதலில் சுமார் 42,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் வாழும் மக்கள் அடிப்படைத் தேவைகள் எதுவும் கிடைக்காமல் பெண், குழந்தைகள் உட்பட்டோர் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உச்சி மாநாட்டின் போது இஸ்ரேலுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மாநாட்டில் அவர் கூறியதாவது, இஸ்ரேல் காசா மீது நடத்தும் கொடூர தாக்குதல் ஒரு இனப்படுகொலையாகும். எனவே இதனை நிறுத்த வேண்டும்.
காசா பகுதி மக்களை சுதந்திரமாக விடாத வரையில் இஸ்ரேலை சவுதி அரேபியா அங்கீகரிக்காது. மேலும் லெபானன் மீது தாக்குதல் நடத்துவதையும் நிறுத்த வேண்டும். ஈரானுடனும் தொடர்ந்து தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. ஈரானின் இறையாண்மையை அனைவரும் ஒன்றிணைந்து நிலை நாட்ட வேண்டும். பாலஸ்தீனம் லெபானில் உள்ள நமது சகோதரர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலுக்கு அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உச்சி மாநாட்டில் சவுதி அரேபியா இளவரசர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.