வட மாநிலங்களில் பொதுவாக பூஜைகளில் புனித நீராடுவது வழக்கம். அந்த வகையில் பௌர்ணமியை முன்னிட்டு தற்போது மக்கள் கங்கையில் நீராடுவார்கள். இதற்காக தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவுக்கு பொதுமக்கள் வரிசை கட்டி செல்கிறார்கள்.
ஏராளமான வாகனங்கள் பாட்னாவுக்கு கங்கையில் நீராடுவதற்காக செல்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலால் பாட்னா நகரம் ஸ்தம்பித்துள்ளது. மேலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.