ஐசிசி தரவரிசை பட்டியல்: பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பாக். முதலிடம்.. இந்திய வீரர்களின் நிலை என்ன…!!!
SeithiSolai Tamil November 15, 2024 07:48 PM

இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலிங்(ICC) சர்வதேச ஒரு நாள் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களின் தரவரிசை பட்டியலை நவம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் வீரர்களின் பேட்டிங் பௌலிங் மற்றும் ஆல்ரவுண்டர் ஆகியவற்றில் சிறந்த வீரர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இந்த தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்த தரவரிசை பட்டியலில் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பின்வருமாறு, 696 புள்ளிகள் எடுத்து ஷாஹீன் அப்ரிடி முதலிடத்தை பிடித்துள்ளார்.

ரஷிப் கான் 2 ஆவது இடத்தையும், கேஷோ மஹராஜ் 3 ஆவது இடத்தையும், இந்திய அணியின் குல்திப் யாதவ் 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். பேட்டிங் காண தரவரிசை பட்டியலிலும் பாகிஸ்தான் அணியே முதலிடத்தை பெற்றுள்ளது. இதில் பாபர் ஆசாம் 825 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், 765 புள்ளிகள் பெற்று இந்திய அணியின் ரோகித் சர்மா 2ஆவது இடத்தையும்,763 புள்ளிகள் பெற்று சுப்மன் கில் 3ஆவது இடத்தையும்,746 புள்ளிகள் பெற்று இந்திய அணியின் வீரர் விராட் கோலி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.