வணிகர்கள் மீது பாஜக கொடூர தாக்குதல்!...வாடகை கடைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி!...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
Seithipunal Tamil November 15, 2024 08:48 PM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து  கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதையும், சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை அமலாக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 23ல் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதலாகும்.

ஒன்றிய பாஜக அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.