யானை தந்ததால் செய்யப்பட்ட யானை பொம்மை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பின்னணி குறித்து விசாரணை தொடரும் என விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார்.
தமிழ்நாட்டில் விலை உயர்ந்த யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட யானை பொம்மைகள் விற்கப்படுவதாக சென்னை வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வனத்துறையில் உள்ள சிறப்பு பிரிவினர் அவர்களை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டு சிலை வாங்குவது போல் விழுப்புரத்தில் ஒரு வியாபாரியை ஏற்பாடு செய்து அவர் மூலம் விற்பவர்களிடம் பேச வைத்து அதற்கான சிலையை வாங்க விழுப்புரத்தில் சிலையுடன் வந்தவர்களை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் விடுதியில் விழுப்புரம் வனத்துறையுடன் சென்னை சேர்ந்த சிறப்பு படை வனத்துறையினர் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரி, ராஜா, பிரபாகரன், ஜஸ்டிஸ், கருப்பசாமி, பைசல் முகமது ஜியாகிதீன், உள்ளிட்ட 12 பேரை நேற்று கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூபாய் 6.50 கோடி மதிப்பிலான ஆறரை கிலோ எடை கொண்ட யானை தந்ததால் ஆன யானை பொம்மைகளையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை 12 பேரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று விழுப்புரம் வன அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் வந்து கைப்பற்றப்பட்ட பொம்மைகளை பார்வையிட்டு வழக்கு தொடர்பாக மண்டல வன அலுவலர் (பொறுப்பு) சதிஷ் இடம் கேட்டறிந்தார். மேலும் வழக்கு விசாரணை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவரிடம் அறிவுறுத்தினார். பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளரிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு அக்டோபர் 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பல்வேறு வன உயிரின குற்றச்செயல்கள் கண்காணிக்கபட்டு வருவதாகவும், யானை தந்ததினால் செய்யப்பட்ட யானை பொம்மைகள் விழுப்புரத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் 12 பேரை கைது செய்து 4 யானை பொம்மைகளை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார். இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை தொடரும் என்றும் யானை பொம்மை கடத்தலில் தொடர்பு உடையவர்கள் மீது தொடர்ந்து விசாரனை செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிதி நிலைக்கு ஏற்ப படிப்படியாக நிரப்பப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.