உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் எலான் மஸ்க்இருக்கும் நிலையில் இரண்டாம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இருக்கிறார். இவருக்கு தற்போது 60 வயது ஆகும் நிலையில் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இவர் தொலைக்காட்சி பிரபலமான லாரன் சான்செஸ் என்ற பெண்ணை காதலித்து வரும் நிலையில் இந்த பெண்ணுக்கு தற்போது 54 வயது ஆகிறது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் தங்கள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெஃப் பெசோஸ் தன்னுடைய முதல் மனைவி மெக்கன்சிஸ் ஸ்காட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.