தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் மகன் ஆவார். இவருடைய தாய் சரிகா. இவருக்கு அக்சரா ஹாசன் என்ற தங்கை இருக்கிறார். இதில் அக்ஷரா பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் சரிகா மற்றும் கமல்ஹாசன் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது தொடர்பாக தற்போது முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
அதாவது என்னுடைய பெற்றோர் பிரிந்த போது நான் என் அம்மாவுடன் மும்பைக்கு சென்று விட்டேன். அவர்கள் இருவரும் இன்னும் பிடிவாதமாக பிரிந்து வாழ்ந்து வருவது எனக்கும் என்னுடைய தங்கை அக்ஷராவுக்கும் வேதனையை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். இந்த விஷயம் எங்களை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினியின் கூலி படத்தில் அவருக்கு மகளாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.