திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 17 மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பள்ளி விடுதி வார்டனான சரண் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மாணவர்களை தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவருக்கு 25 வயது ஆகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் மற்றும் தலைமை வார்டன் ராம்பாபு ஆகியோரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சரண், நடவடிக்கை எடுக்காத சுரேஷ்குமார், ராம்பாபு ஆகியோரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.