தமிழக அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் சவுக்கு சங்கர், கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் காவலர்கள் குறித்து அவதூறு மற்றும்கஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது 2 குண்டாஸ் பாய்ந்த நிலையில் உச்சநீதிமன்றம் சென்று வழக்குகளை உடைத்து வெளியே வந்துள்ள சவுக்கு சங்கர் மீண்டும் தமிழக அரசு மற்றும் திமுகவிற்கு எதிரான கருத்துக்களை (குற்றச்சாட்டு புகார்களை) தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரிசனின் தனிப்பட்ட வருவாய் மட்டும் 30 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று ஒரு குற்றச்சாட்டை சவுக்கு சங்கர் முன்வைத்து திமுகவை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த செய்திக்குறிப்பில், "இந்த மூன்று ஆண்டுகளில், இவரது தனிப்பட்ட வருவாய் மட்டும் 30 ஆயிரம் கோடியைத் தாண்டும்.
வருடத்தில் பாதி நாட்கள் ஐரோப்பா, அமெரிக்கா, அரபு நாடுகள் என்று சுற்றுப்பயணத்திலேயே இருப்பார் ‘திமுகவின் சசிகலா’.
நெல்லையில், ஒரு சாதாரண நடுத்தர வகுப்பில் பிறந்து, மென்பொறியாளராக பணியாற்றிய சபரீசனுக்கு, ஒரு கவாசாகி பைக்கைத் தவிர சொத்து என்று எதுவுமே கிடையாது. சாதாரண சபரீசன் ஸ்டாலின் குடும்பத்தின் பெண் எடுத்ததால் மட்டும் இன்று “திராவிட மாப்பிள்ளை சார்”
இன்று சபரீசனிடம் உள்ள வாட்சுகளின் மதிப்பு மட்டும் 60 கோடிகளைத் தாண்டும். லண்டனில் தங்கியிருந்தபோது, சபரீசன் ஒரு இரவில் மது விருந்துக்கு செலவிட்ட தொகை மட்டும் 12 லட்சம் ரூபாய். உலகம் முழுக்க பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளார்.
அரசில் எந்தப் பொறுப்பையும் வகிக்காமல், ஒரு தனி நபரிடம் இவ்வளவு அதிகாரமும், பணமும் குவிந்திருப்பதை முதல்வரே, அனுமதித்து, அங்கீகரித்து ஊக்குவிக்கிறார் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். இல்லையென்றால், பென் நிறுவனத்தை முதல்வர் அனுமதித்திருக்கவே மாட்டார்.
இப்படி தானும், தன் குடும்பத்தினரும், நாள்தோறும் தமிழகத்தை சுரண்டி கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்த திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார்.
ஒரு குடும்பம் தமிழகத்தை சுரண்டி கொழுப்பதை எத்தனை நாட்களுக்கு அனுமதிப்பது என்பதை தமிழக மக்கள்தான் சிந்திக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.