நாகை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இதில், ஆளும் திமுகவின் கூட்டணி கட்சி நாகை தொகுதி எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
"கடந்த வாரம் நகராட்சியில் நடந்த அரசு நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் (அவரின் பெயர்) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (திமுகவின் கூட்டணி கட்சியான கம்னியூஸ்ட் கட்சி எம்பி) ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இது ஒரு அதிகாரி செய்த தவறாக இருக்கலாம், ஆனால் அந்தச் செயல் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியை பிளக்க வெளியில் சில சக்திகள் முயற்சி செய்கின்றன. ஒரு அதிகாரி செய்த இந்தச் சிறு பிழை, அரசைத் தரக்குறைவாக பார்க்கவைக்கிறது. இதுதான் சமூக நீதியா? திராவிட மாடலா?” என கோவத்தை மறைத்து பணிவாக விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் கேள்வி எழுப்பி பேசினார்.
மேலும், "எங்கள் பெயர் இடம்பெற வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; அதற்கு பின்னால் உள்ள சுயமரியாதையை புரிந்து கொள்ள வேண்டும். இனி தவறுகள் நிகழாமல், நெறிமுறைகளைப் பின்பற்றுங்கள்" எனவும் தோழமையுடன் விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் மேடையிலேயே திமுக அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.