கொஞ்சம் அசந்துட்டேன்…! அதான் ஏமாத்தீட்டாங்க… நல்லவங்கன்னு நம்பி பட்டதெல்லாம் போதும்… அமைச்சர் துரைமுருகன் வேதனை..!!
SeithiSolai Tamil November 16, 2024 04:48 PM

வேலூரில் உள்ள காட்பாடியில் நேற்று நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தேர்தலில் எப்படி வியூகம் வகுப்பது, நம் கழகத்திலிருந்து எப்படி எதிர்க்கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும். போன தேர்தல் சமயத்தில் நான் கொஞ்சம் அசந்து விட்டேன். ஆனால் இந்த முறை எப்படி இருக்காது.

யாராவது 60 ஆண்டுகளாக கட்டி காத்த இந்த இயக்கத்துக்கு துரோகம் செய்தால் கண்ணுல விரலை விட்டு ஆட்டிடுவேன். என்னை எதிரியே கொள்ள வந்தால் கூட மன்னிப்பேன். ஆனால் துரோகம் செய்தால் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். எனக்கு சிலர் துரோகம் செய்து விட்டார்கள் என்பது நன்றாக தெரியும். எனவே துரோகிகளை களையெடுத்து விட்டு எப்படி தேர்களை சந்திக்க வேண்டும் என்பதும் எனக்கு நன்றாக தெரியும். கடந்த முறை எல்லோரும் நல்லவர்கள் என்று மேலும் அதன் விளைவால் நான் பல பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று கூறினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.