ஆஸ்கர் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும், பைரவி படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கரின் மகனுமான பாலாஜி பிரபு நடிகர் சிவகுமார் சினிமாவில் இருந்து விலக என்ன காரணம் என்பதை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
சிவகுமார் நல்ல நடிகர். பண்பாளர். ஒழுக்கமானவர். இன்னைக்கும் மார்க்கண்டேயனாக இருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, முத்துராமன், கே.ஆர்.விஜயா, பத்மினி என பலருடன் நடித்தவர். தமிழ்சினிமா உலகில் பேர் பெற்ற நடிகர்.
டிவி சீரியல்
Also read:
சிவகுமார் சாரிடம் சித்ரா லட்சுமணன் கேள்வி கேட்கிறார். ‘நீங்க ஏன் இப்போ நடிக்கிறது இல்ல’ன்னு கேட்கிறார். அதற்கு அவர் இப்படி பதில் சொல்கிறார். 2005ல் ஒரு டிவி சீரியலில் நடித்து வருகிறார். ஒரு முக்கியமான எமோஷலான சீன்.
அதுல அவரோட முழு பர்பார்மன்ஸ் கொடுத்து நடிச்சிக்கிட்டு இருக்கார். அப்போ அந்த செட்டுக்குள்ள 18 வயசு கூட இல்லாத பொண்ணு போன்ல யாரு கூடயோ பேசிக்கிட்டு ஹஹஹ…ஹஹஹன்னு சிரிச்சிக்கிட்டு இருந்துருக்கு.
#image_title
‘எம்மா என்னம்மா நடிச்சிக்கிட்டு இருக்கும்போது ஏன் கத்திக்கிட்டு இருக்கேன்னு சிவகுமார் கோபமாகக் கேட்டுருக்கிறார். அதற்கு அந்தப் பொண்ணு ‘ஏன் சார் இவ்ளோ கோபப்படுறீங்கன்னு கேட்டுருக்கு. இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம்.
ஏன் சார் டென்ஷன்
நீங்க நடிக்கிறதுக்கு பர்பார்மன்ஸ் கம்மியா இருந்துச்சுன்னா டப்பிங்ல செட் பண்ணிற வேண்டியது தானே சார்… டப்பிங்ல பேசிக் கரெக்ட் பண்ண வேண்டியது தானே சார். இதுக்கு எல்லாம் ஏன் சார் டென்ஷன் ஆகறீங்க’ன்னு அந்தப் பொண்ணு சிவக்குமார் சாரை எதிர்த்துக் கேட்டுருக்கு. பாருங்க இந்த சினிமா எப்படிப் போய்க்கிட்டு இருக்குன்னு. அன்னைக்கு சிவகுமார் சார் பேட்டி கொடுத்துருக்காரு.
‘செருப்பாலை அடிச்ச மாதிரி இருந்தது என்னை…’. நானே இனிமே இந்த சினிமாவுல இருக்கக்கூடாது. இனிமே நமக்கு மரியாதை கிடையாது. இந்த பீல்டை விட்டு ஒதுங்கிக்கிடணும்கற முடிவுக்கு அவர் வர்றாரு.
பாரதிராஜா, பாலசந்தர்
அப்படின்னா எவ்வளவு காயம்பட்டுருக்கு அவரோட மனது? எவ்வளவு வேதனை அடைஞ்சிருக்கும்? பாரதிராஜா, பாலசந்தர் மாதிரி பெரிய டைரக்டர்களுடைய படங்கள்ல நடிச்சவரு. அவரு வேதனையோட பேட்டியில இப்படி சொல்லிருக்காரு.
அப்போ கூட சித்ரா லட்சுமணன் சார் ‘அந்தப் பொண்ணு சிரிச்சதுக்காக நீங்க சினிமாவை விட்டு விலகணுமா’ன்னு கேட்கிறார்.
Also read:
‘அப்படி இல்ல சார். நான் வணங்குற தொழில் சினிமா. எனக்குப் பேரு, புகழ், சோறு கொடுத்தது இது. அதனால இந்தத் தொழில்ல நேர்மை, நாணயம், கௌரவமாக நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.
கொலை பண்ற சூழல்
இப்படிப்பட்ட தொழில்ல இப்படிப்பட்ட ஆள்கள் எல்லாம் பேசுற சூழல் வரும்போது நான் விலகுறது தான் நல்லது. அப்படி இல்லன்னா கொலை பண்ற சூழல் வந்துடும். நான் யாரையாவது கொலை பண்ணிடுவேன்’ என்றாராம் சிவக்குமார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.