மக்களுக்கு அடுத்த ஷாக்..! விரைவில் சிகரெட் விலை உயர்கிறது..!
Newstm Tamil December 03, 2024 08:48 PM

ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு 148 பொருட்களுக்கான வரி விகிதங்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஆலோசனை செய்யப்பட்டு இறுதி செய்யப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் முடிவிற்கு பிறகே இந்த வரி விகிதங்கள் அமலுக்கு வரும். புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள் மற்றும் காற்றூட்டப்பட்ட பானங்கள் மீது 35 சதவீத சிறப்பு வரியை கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பொருட்கள் மீது 5, 12, 18 மற்றும் 28 சதவிகிதம் என்ற நான்கு அடுக்கு வரி ஸ்லாப் எப்போதும் போல தொடரும். மேலும் 35 சதவிகிதம் சிறப்பு வரி என்ற புதிய வரி அறிமுகப்படுத்தப்படும். தற்போது,ஜிஎஸ்டி என்பது நான்கு அடுக்கு வரி அமைப்பாகும். இது போக சிறப்பு வரி கொண்டு வர வாய்ப்புள்ளது.

ஜிஎஸ்டியின் கீழ், சில அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. சில பொருட்களுக்கு மிகக் குறைந்த ஸ்லாப்பில் வரி விதிக்கப்படுகிறது, அதே சமயம் ஆடம்பர மற்றும் அலங்கார பொருட்கள் மிக உயர்ந்த வரியை ஈர்க்கும். கார், வாஷிங் மெஷின் போன்ற ஆடம்பர பொருட்கள் மற்றும் காற்று நிரப்பப்பட்ட நீர் மற்றும் புகையிலை பொருட்கள் போன்ற பொருட்கள் அதிகபட்ச வரியை பெறுகின்றன.

அதேபோல் கூகுள் பே மூலமாக இனி ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் பே மூலம் செய்யப்படும் ரீசார்ஜ் பிளான்களுக்கு 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்போதெல்லாம் நாடு முழுக்க ஆன்லைன் வர்த்தகம் அதிகம் ஆகிவிட்டது. முக்கியமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ சாதனங்கள் மூலம் பணம் செலுத்துவது அதிகம் ஆகிவிட்டது. சாதாரணமாக டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை பின்பற்றுகிறார்கள்.

இதன் காரணமாக நேர விரயம் குறைகிறது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் சார்ஜ் இல்லை. அதோடு உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. கையில் எப்போதும் பணத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் யுபிஐ பேமெண்ட் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் கூகுள் பே மூலமாக இனி ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.