லுங்கி கட்டிக்கொண்டு இசைக் கச்சேரிக்கு வந்த டி.எம்.கிருஷ்ணா! நிரம்பி வழிந்த மியூசிக் அகாடமி!
Webdunia Tamil December 26, 2024 08:48 PM

மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் நேற்று நடந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏராளமான கூட்டம் வந்ததால் மியூசிக் அகாடமியே ஸ்தம்பித்துள்ளது.

இந்தியாவின் மரபான் இசையில் ஒன்றான கர்நாரக இசையில் வித்வானாக விளங்குபவர் டி.எம்.கிருஷ்ணா. ஆனால் அதேசமயம் சமூக சீர்திருத்த கருத்துகள் கொண்ட டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்து கர்நாடக இசை ஒரு சாராருடையதாக மட்டும் கொள்ளப்படுவதை எதிர்த்து பேசியும் செயல்பட்டும் வருகிறார். பெரியார் குறித்த பாடல்களை கர்நாடக இசையில் பாடுவது தொடங்கி, கர்நாடக இசையை எல்லாரும் பயிலும் வகையில் சேரிகளுக்கும் சென்று கச்சேரி நடத்தி வந்தார்.

மேலும் கலைப் பன்முகத்தன்மைக்கு எதிரான சூழல் இருப்பதால் இனி மார்கழி இசைக் கச்சேரிகளில் பங்கேற்க மாட்டேன் என சில ஆண்டுகள் முன்னதாக அறிவித்த டி.எம்.கிருஷ்ணா, அதன்படி கடந்த ஆண்டு வரை மார்கழி கச்சேரிகளில் பாடாமலே இருந்து வந்தார். கர்நாடக இசை உலகில் டி.எம்.கிருஷ்ணாவின் கருத்துகளை வெறுப்பவர்களும் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நீண்ட காலம் கழித்து நேற்று மெட்ராஸ் மியூசிக் அகாடமி கச்சேரியில் டி.எம்.கிருஷ்ணா பாடினார். இதனால் அவரது கச்சேரியை கேட்பதற்கு ஏராளமானோர் கூடியதால் அரங்கம் நிறைந்ததோடு, வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.

கச்சேரிக்கு லுங்கி அணிந்து வந்த டி.எம்.கிருஷ்ணா மனித சமத்துவம் குறித்த பாடல்களை பாடியதுடன், எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சுதந்திரம் வேண்டும் என்ற பாடலையும் பாடி அரங்கத்தை பரவசத்தில் நிறைத்தார்.

Edit by Prasanth.K

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.