சென்னையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம்.. சோதனை ஓட்டம் தொடங்கியது..!
Webdunia Tamil December 26, 2024 08:48 PM


சென்னையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்பட இருக்கும் நிலையில், சோதனை ஓட்டம் தொடங்கியதாக தகவல் உள்ளது.

சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மூன்று ரயில் பெட்டிகளை கொண்ட 80 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியதாகவும், இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில் கடந்த அக்டோபர் மாதம் பூந்தமல்லி டெப்போவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் மணிக்கு 10 கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை சோதனை செய்யப்படும். அதன் பின்னர், 60 கிலோமீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வரை சோதனை மேற்கொள்ளப்படும் என்று மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரேக்கிங் சிஸ்டம் உள்பட அனைத்தும் சோதனை செய்த பிறகு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பூந்தமல்லி-போரூர் இடையே டிரைவர் இல்லாமல் மெட்ரோ பயணிகள் சேவை தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.