சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, என்னை தனிப்பட்ட முறையில் சங்கி எனக் கூறியதற்கு தான் செருப்பை கழட்டி அடிப்பேன் எனக் கூறினேன். சங்கி என்றால் நண்பன் என புராண காலங்களிலேயே விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாணயம் வெளியிடுவதற்கு மத்திய அரசின் அமைச்சர்களை அழைத்து வருகிறீர்கள். சென்னையில் இருந்து டெல்லி சென்று மத்திய அரசின் தலைவர்களை பார்த்து சந்தித்து பேசுகிறீர்கள். அப்படி என்றால் திமுகவைச் சார்ந்தவர்கள் எல்லாம் சங்கி இல்லையா என கேள்வி எழுப்பி உள்ளார்.
சங்கி என்றால் நண்பன் என்று பொருள்படுகிறது. திராவிடன் என்றால் திருடன் என்று பொருள்படுகிறது. நீங்கள் தமிழ் மக்களை தமிழ் இனத்தை மறைத்து திராவிடன், திராவிடன் எனக் கூறுகிறீர்கள். எனது தந்தையை சங்கி என கூறுவது வருத்தம் அளிக்கிறது என ரஜினியின் மகள் கூறினார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் ஏற்கனவே ஆதரவாக பேசினேன். அனைத்து மாநில முதலமைச்சர்கள் மீதும் வருமானவரித்துறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மீது மட்டும் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.