இந்திய அணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் அறிமுகமானார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ஆல் ரவுண்டராக சிறப்பான முறையில் இந்திய அணியில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்த நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகள், 65 டி20 போட்டிகள், 116 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 765 டிக்கெட்டுகள் வரை வீழ்த்தியுள்ளார்.
இவர் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியில் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அஸ்வின் தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த x பதிவில், நன்றி அஸ்வின். உங்களுடைய நம்ப முடியாத வாழ்க்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு எண்ணற்ற தருணங்களை கொடுத்துள்ளது. எல்லைகளைத் தாண்டி பல லட்சம் பேரை கனவு காண தூண்டியுள்ளது. உங்களுடைய புதிய முயற்சியில் நீங்கள் மகத்தான வெற்றியைக் காண நான் வாழ்த்துகிறேன். மேலும் உங்களுடைய ஒவ்வொரு முயற்சியிலும் புத்திசாலித்தனத்தை வழங்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.