நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா அம்பேத்கர் குறித்த பேசியது சர்ச்சையாக மாறியதாக கூறி அவர் பதவி விலக வேண்டும் எனவும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதோடு அவருக்கு கண்டனங்களும் குவிகிறது. அதாவது அம்பேத்கர் பெயரை கூறுவது தற்போது பேஷன் ஆகிவிட்டது எனவும் அம்பேத்கர் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை சொன்னால் அடுத்த 7 ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு போகலாம் எனவும் அமித் ஷா பேசியுள்ளார். ஆனால் இதனை மறுத்த அமித்ஷா காங்கிரஸ் தன் பேச்சை ஏஐ மூலமாக திரித்து வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அந்த பதிவில், அம்பேத்கர் குறித்த பாஜகவின் கருத்தை வெளிப்படையாக பேசியதற்காக உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் பேசியது எங்களுக்கு ஆச்சரியத்தை தரவில்லை. உங்கள் கட்சியின் உண்மையான மனநிலை என்பது ஏற்கனவே எங்களுக்கு தெரியும். அரசியல் சிரிப்புக்கு நீங்கள் அளித்த மரியாதையை தற்போது நாடே பார்த்துவிட்டது. அவருடைய அரசியல் அமைப்புக்கு கீழ் இயங்கும் நாடாளுமன்றத்திலேயே இப்படி ஒரு வெட்கமற்ற செயலை செய்ததற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள். எனக்கு அம்பேத்கர் மீது அளவற்ற மரியாதை இருக்கிறது எனவும் என்னுடைய வார்த்தையை திரித்து வெளியிடாதீர்கள் எனவும் கூறி நாட்டை தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறீர்கள். நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் கிடையாது.
உங்கள் வார்த்தைக்கு பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு பதில் சொல்லுங்கள். அம்பேத்கர் மட்டும் இல்லை எனில் நான் கண்டிப்பாக முதல்வராகியிருக்க முடியாது. என்னுடைய கிராமத்தில் மாடு மேய்த்து கொண்டிருப்பேன். அதேபோன்று கார்கே காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்க முடியாது. அதுமட்டுமின்றி நீங்களும் உள்துறை மந்திரி ஆகி இருக்க முடியாது. உங்களுடைய நண்பர் மோடியும் இன்று பிரதமராகிருக்க முடியாது. இன்னும் ரயில் நிலையத்தில் டீ விற்று கொண்டு தான் இருக்க வேண்டும். அம்பேத்கரால்தான் என்று அனைவரும் உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது. மேலும் உங்களைப் போன்றே நானும் பதிலளிக்கிறேன் மோடியின் பெயரை உச்சரித்ததற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்தால் உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.