தஞ்சாவூர் மாவட்டம் மேலபுனவாசல் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். தம்பதியருக்கு விக்னேஷ், ராஜேஷ் குமார் மற்றும் மூர்த்தி என்ற மகன்கள் இருந்தனர். திருவையாறு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக விக்னேஷ் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். இதற்கு சேகர் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் விக்னேஷ் தந்தையை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.பலத்த காயம் அடைந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் இறந்தார். இந்நிலையில் தந்தையை சரமாரியாக வெட்டியதால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பலத்த காயங்களுடன் கிடந்த விக்னேஷை மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விக்னேஷும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.